Monday, 28 December 2009

எங்க போனாலும் பின்னாடியே வர...




நிம்மதியா போய் வீட்ல தூங்கலாம்னு பார்த்தா 
                 கனவுல வந்து தூக்கத்தை கெடுக்குற...


ஊர்ல போய் அமைதியா இருக்கலாம்னு பார்த்தா 
               அங்கேயும் போன்-ல வந்து பாடா படுத்துற...


சரி ஆபீசே  போவோம்னு வந்தா 
              இங்க தலை விரிச்சு ஆடுற... 


எங்க போனாலும் பின்னாடியே வர...


சரி என்ன செய்ய, நான் எழுதின code .. கூடவே வா :-) 

Sunday, 20 December 2009

விவாகரத்து





குவியும் விவாகரத்து வழக்குகள்

"காதல் - திருமணத்தில் முடிய வேண்டும்"

என்பதை தவறாக புரிந்து கொண்டார்களோ???

புகைப்படம் , நன்றி : google 

Thursday, 17 December 2009

உனக்கு இப்போ சந்தோசமா??




வெறித்து பார்த்த வானத்தையே பார்த்து 


தெருவில் நடந்து கொண்டிருந்தேன்!


சடாரென்று மழை.. 


மழையில் நனைய ஏனோ மனமில்லை


நிழலை தேடி ஓடி நின்றேன்..


திடீரென ஒருத்தி வந்தாள்...


இவள் தான் என் நிழலோ ??


என ஒரு சின்ன யோசனை..


அவ்வளவு தான்,


திடீர் மழை உடனே நின்றது..


நிழலும் விலகியது.


உனக்கு இப்போ சந்தோசமா??


இப்போ நான் வெறித்து பார்த்தேன் வானத்தை!!


நன்றி , புகைப்படம் : google

Wednesday, 16 December 2009

இட ஒதுக்கீடு!




சாதிகள் இல்லையடி பாப்பா!


நீ படிக்கும் ஏட்டில் மட்டும்


பெரும் மதிபெண்ணில் அல்ல!


புகைப்படம் , நன்றி : google

Monday, 14 December 2009

காதல்





காதலின் தூய்மை என்பது அன்னையின் தாய்மைக்கு சமமானது.

இருவரின் தாக்கமும் இணைந்தால் மட்டுமே கலர் கனவுகள் எக்கச்சக்கம்..

ஒன்று குறைந்தால் கூட தூக்கம் ஒரு எச்சம்,

உள்ளம் ரணமாவது தான் மிச்சம்!

புகைப்படம் , நன்றி : google

Sunday, 13 December 2009

இந்தியா




தலையில் ஒரு இழுபறி,

காலில் ஒரு கொலைவெறி,

இடையிடையே உள்காயங்கள் தினசரி,

இவை யாவும் கடந்து எனக்கு,

உலகின் நாளைய வல்லரசு என்ற முகவரி!

புகைப்படம் , நன்றி : google  

Saturday, 12 December 2009

எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன்..

என்னடா இவன் முதல் பதிவே தலைப்பை இப்படி வைத்திருக்கிறான் என்று நீங்கள் யோசிக்கிறது புரியுது.. நான் அடிக்கடி இதைப்பற்றி யோசிப்பேன்.. அதனால் தான்..


எப்படி இருந்த நான்:
  • கல்லூரியில் படித்த நாட்கள் அவை. விடுதியில் தங்காமல் திருப்பரங்குன்றத்தில் நண்பர்களுடன் தங்கியிருந்தேன்.ரூ 2000 இருந்தால் ஒரு மாதம் தாராளாமாக செலவு செய்யலாம். தினம் சாப்பாட்டிற்கு அருகே ஒரு வீட்டில் ஏற்பாடு செய்து தருவார்கள். 
  • நண்பன் இன்று போட்ட சட்டை நாளை எனது, மறுநாள் இன்னொருவன். இப்படியே செல்லும். வருடம் ஒரு புது ஆடை எடுத்தால் பெரிய விஷயம்.. 
  • treat என வந்தால் ஹோட்டல் ஆர்த்தி தான். ரூ 25 -க்கு  சாப்பாடு... மிகப்பெரிய treat அது.. 
  • ஞாயிற்றுக்கிழமை ரூ 50 கொடுத்தால் சிக்கன் கிடைக்கும் :-) நான்கு பேர் வயிறார சாப்பிடலாம். இருப்பினும் மாத கடைசியில் இந்த பணத்திற்கும் திண்டாட்டம் தான். எவ்வளவு தான் பெட்டி, சட்டை என எங்கு தேடினாலும் பத்து ரூபாயை தாண்டாது. அப்பொழுது தான் நண்பன் மாசானம் வருவான். உள்ளூர் பையன். எனவே வெளியே செல்லலாம் என்று எங்களைத்தேடி வருவான். வந்தவனை மடக்கி இருக்கும் காசை பிடுங்கி சிக்கன் சமைக்க  தந்து விடுவோம். அவன் திரும்ப வீடு செல்ல காசு இருக்காது.. சின்ன சொக்கிகுளம் செல்ல இரண்டு பேருந்துகள் மாறி சென்றால் ரூ 7 தேவைப்படும். மிகவும் சிரமப்பட்டு ரூ 5 ஏற்பாடு செய்வோம். ஒரே பேருந்தை பிடித்தால் ரூ 4.50 தான்.. அதற்காக ஒரு மணிநேரம் காத்திருக்க வேண்டும். 
  • தங்கியிருந்த வீட்டில் இருந்து கல்லூரி செல்ல சைக்கிள், லிப்ட் என எப்படியாவது செல்வேன்.. ஆனால் காசு கொடுத்து சென்றதில்லை.. ஒரு நண்பன் இருக்கிறான் அவன் புண்ணியத்தில் ஆட்டோவில் செல்வோம்.. என்றாவது ஒரு நாள். 
  • திரைப்படம் பார்ப்பதென்றால் அலாதி பிரியம். தேவி கலைவாணி, மணி இம்பாலா ரூ 20 - 25  -ல் முடிந்து விடும்.. A/C, DTS அங்கும் உண்டு ..


இப்படி ஆகிட்டேன்:
  • அனைத்து வசதிகளும் கொண்ட வீடு, சொகுசான வாழ்க்கை.... மாத செலவு பல மடங்கு எகிறிவிட்டது. 
  • மாதம் புது புது ஆடைகள்.. ஜிகு ஜிகு சட்டைகள்.
  • treat - என வந்தால் மாத சம்பளமே காலி ஆனாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. நம்மளும் மற்றவர்கள் treat -ல வெளுத்து வாங்குரோம்ல..  
  • இன்று என்னடானா சிக்கன் 65 விலை நூறு-ஐ தொடுகிறது.. தொட்டு என்ன பண்ண, ஒருத்தருக்கு கூட காணுவதில்லை. 
  • பயணத்திற்கு தேவை என்றால் ஆட்டோ இல்லையேல் குலு குலு சொகுசு பேருந்து, கால் டாக்ஸி என்று மாறி போய்விட்டது.
  • சினிமா பார்பதென்றால் சத்யம், ஐநாக்ஸ், மாயாஜால். விலையை சொல்லி தெரிய வேண்டியதில்லை.. 
அன்றைய காத்திருப்பில் ஒரு மகிழ்ச்சி இருந்தது. அன்றைய செலவில் ஒரு அர்த்தம், நியாயம் இருந்தது. இன்றும் இருக்கிறது, நியாயப்படுத்த.. ஆனால் எவ்வளவு தூரம் என்று தெரியாது. இதை அடிக்கடி யோசிப்பேன்..உடனே தோன்றுவது...


"எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன்.."