Saturday 23 January, 2010

கிராமப்புற மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு!

தலைப்பை படித்ததும் பலரின் எண்ணத்தில் உதிப்பது, இரண்டு விதமான எண்ணங்களாக இருக்கும்..  "அட இதால தான் பா எனக்கு MBBS சீட் போச்சு.." , "இது மட்டும் இல்லாம இருந்திருந்தா நான் Anna university ல படிச்சிருப்பேன்"  "நல்ல வேலை இது இருந்துச்சி, இல்லேன்னா நான் எங்க இன்ஜினியரிங் படிச்சிருக்க போறேன்?" 
இந்த திட்டம் கொண்டு வந்ததால பல கிராமப்புற மாணவர்களால் B E , MBBS போன்ற படிப்புகளை பாக்க உதவுச்சு. அதே நேரத்துல, போன வருஷம்  cut - off வைத்து கடுமையா படிச்ச பலரின் கனவும் தகர்ந்து போச்சு. சரி இதை பற்றி சற்று விவரமாக பார்ப்போம்.. 
எவ்வளவு இட ஒதுக்கீடு? 
B E , MBBS போன்ற தொழிற்படிப்புகாக தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பயில பொது நுழைவு தேர்வு நடத்தப்பட்டு வந்தது (இப்போது இது இல்லை). +2 பொது தேர்வின் மதிப்பை தவிர  இந்த நுழைவு தேர்வின் மதிப்பை பொறுத்து தான் எந்த கல்லூரியில் என்ன பிரிவு கிடைக்கும் என தெரியும். கிராமப்புற மாணவர்களுக்கு இதை பற்றி போதிய விழிப்புணர்வு / வசதிகள் இல்லையென்ற ஒரு வாதத்தை முன்வைத்து 15 % ஒதுக்கீட்டை நிர்ணயித்தார்கள். ஒரு கட்டத்தில் அது 25 % கூட இருந்தது. நீதிமன்றம் இதில் தலையிட, இட ஒதுக்கீடே வேண்டாம்னு தூக்கிட்டாங்க. 
சரி.  இந்த திட்டம் கொண்டு வந்ததால யாரு நன்மை அடைஞ்சா? இப்படி செஞ்சதால மட்டும் கிராமப்புற கல்வி உயர்ந்திருகிறதா? எப்படி கொண்டு வந்திருந்தா இது நல்லா இருந்திருக்கும்? என்பதை பற்றி எனது கருத்துக்கள் இங்க முன்வைக்கிறேன். 
இந்த திட்டம் கொண்டு வந்ததால யாரு நன்மை அடைஞ்சா?
  • நான்.
  • என்னை போன்று அந்த காலகட்டத்தில் இந்த ஒதுக்கீடு மூலம் படித்த மாணவர்கள்.
  • இதன் மூலம் பெரிய கல்வி நிறுவங்களில் பாமர மாணவனாலும் படிக்க முடிந்தது.
பல பேரோட வயித்தெரிச்சலை கொட்டி தான் என்னால இத படிக்க முடிஞ்சுது. பலர் இதற்காகவே இட ஒதுக்கீடு உள்ள பள்ளிகளுக்கு தங்கள் பிள்ளைகளை சேர்த்து படிக்க வைத்தார்கள். இந்த திட்டம் அந்த பள்ளிகளுக்கு இருந்ததால செல்வாக்கும் கூடியது. 
இப்படி செஞ்சதால மட்டும் கிராமப்புற கல்வி உயர்ந்திருக்கா?
  • கண்டிப்பா இல்லை. 
அன்றைக்கு இருந்த அதே தரம் தான் இன்றும் இருக்கிறது. ஒரு சின்ன வித்தியாசம். இப்போ அந்த ஒதுக்கீடும் இல்ல, பொது நுழைவு தேர்வும் இல்லை. எந்த காரணத்தால இந்த நுழைவு தேர்வை கொண்டு வந்தாங்களோ அதோட நோக்கமே இல்லாம போனது தான் மிச்சம். 
நான் படிச்ச காலத்துல இந்த நுழைவு தேர்வு பற்றில்லாம் பெரிய விழிப்புணர்வே இல்லை. என்ன சுத்தி இருந்துவங்களும் அதே நிலைமை தான். ஒரு வேலை இதை (நுழைவு தேர்வை) நீக்காமல் இருந்திருந்தால் கூட இன்னைக்கும் பல பேருக்கு இது பற்றி தெரியாமல் போயிருக்கும். இதுல எனக்கு கொஞ்சம் கூட மாற்று கருத்தே இல்லை.
ஒதுக்கீடு தந்தா மட்டும் கல்வி தரம் உயர்ந்துருமா?  வேற என்ன வேணும்?? 
எப்படி கொண்டு வந்திருந்தா இது நல்லா இருந்திருக்கும்?
  • முதலில் எங்கெல்லாம் கல்வித்தரம் பின்தங்கி இருக்கிறதோ, அவற்றை தேர்வு செய்திருக்கணும். (இது அப்பொழுதே இருந்தது.)
  • அப்படி தேர்ந்தெடுத்த பின்னர், இன்னும் எத்தனை ஆண்டுகளில் என்ன திட்டங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் இருந்தால் இந்த கல்வி தரத்தை மேம்படுத்த முடியும் என்பதை ஆராய வேண்டும்.
  • இந்த  கால அளவுகோலை நிர்ணயத்து தான் ஒதுக்கீடை கொண்டு வந்திருக்க வேண்டும். 
  • படிப்படியாக ஒதுக்கீட்டின் விழுகாடை குறைத்து வரவேண்டும். அதே சமயம், தமிழகத்தின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள பள்ளிகளின் கல்வி தரம் உயர வேண்டும்!
  • இப்படி செய்வதன் மூலம், கிராமங்களில் உள்ள மாணவர்களுக்கும் ஒரு நம்பிக்கை இருக்கும். தன்னை போன்று உள்ள மாணவர்களும் நல்ல கல்வி நிறுவனங்களில் படிக்க செல்வதை பார்த்து தங்களுக்குள் ஒரு உற்சாகம் ஏற்படும். இது நல்ல ஒரு மாற்றத்தை கொண்டு வந்திருக்க வாய்ப்புகள் அதிகம்.  கல்வி வளர்ச்சியில் ஒரு பெரும் மாற்றத்தையே கொண்டு வந்திருக்கும்.
  • ஒரு கட்டத்தில் கிராமப்புற மாணவர்களும் அவர்களின் கல்வி திறனும் உயர்ந்திருக்கும், ஒரு நாள் இந்த  இட ஒதுக்கீடும் நீங்கி இருக்கும்! 
கல்வி தரம் ஒரே மாதிரி இருந்தால் எதற்காக தேவைற்ற உள்-ஒதுக்கீடு, வெளி-ஒதுக்கீடுகள்??


Friday 15 January, 2010

ஆயிரத்தில் ஒருவன் - என் பார்வையில்!!!


ஒரு தலை காதல்இரு தலை காதல்பல முனை காதல், மாஸ் மசாலாபஞ்ச் டயலாக் , குத்து பாட்டு இதை எல்லாம்  எதிர்பாக்குறவங்க இந்த படத்தையும் ,  விமர்சனத்தையும் தவிர்ப்பது நல்லது.
படத்தின் தலைப்பு மட்டுமே நம்மூர் சினிமாக்கு பழகி போன ஒன்று. படத்தின் கதைகளம்   மிகவும் புதுமை. சொல்லப்பட்ட விதமும் புதுமை. இருப்பினும் படத்தின் பிற்பாதியில் சில இடங்கில் வெறுமை நம்மை வாட்டுகிறது.
ரீமா சென் - படம் முழுதும் வரும் "அனிதா பாண்டியன்" பட்டையை கிளப்பிருக்கிறார். நடிப்புநடனம்வீரம்கவர்ச்சி என அனைத்திலும் அசத்தியிருகிறார். தமிழ் சினிமாவில் நடிகைகளுக்கு இப்படி ஒரு வாய்ப்பு கிடைப்பது மிகவும் கஷ்டம். அதை  சரியாக பயன்படுத்தி கலக்கியிருக்கிறார்.
கார்த்தி - பருத்திவீரன் பிறகு சுமார் 2 வருடம் கழித்து கார்த்திக் நடிக்கும் திரைப்படம். படத்தில் முதல் பாதி கார்த்திக்கு தான் சொந்தம். மனுஷன் செம ஜாலியா நடிச்சிருக்கார். இவரிடம் இருந்து இன்னும் நிறைய எதிர் பார்க்கலாம். அவ்ளோ திறமை இருக்கு  "உன் மேல ஆசை தான்" பாட்டு ஒரு உதாரணம்.
பார்த்திபன் - இருண்டு போன ஒரு வம்சத்தின் ஒரு ராஜா. இந்த கதாபாத்திரத்திற்கு,பார்த்திபன் தவிர வேறு யார போடமுடியும்??? வழக்கமான நக்கல் பார்டியாக பார்த்த நம் பார்த்திபனை  இதில் எதிர்பார்க்காதீர்கள். இவரின் கதாபாத்திரம் பற்றி இத்தனை நாட்கள் மறைத்து வைத்ததும் நல்லதே. 
ரவீந்திரன் - இது மாதிரி ஒரு படம் இது வரைக்கும் யாரும் எடுத்ததில்லை , இனி டுப்பதும் கஷ்டம்!  அப்படி சொல்ற ஒரு படத்தை தந்த தயாரிப்பாளர் பெருமை உங்களுக்கு தான் சார் சேரும்!
செல்வராகவன் - காதல் கொண்டேன், 7G படத்துக்கு அப்புறம் புதுபேட்டை வந்தப்பவே இந்த பைய புதுசா யோசிக்க ஆரம்பிச்சுட்டர்னு புரிஞ்சது. அதை இந்த படத்துல நிரூபிச்சிட்டார் . இது வரைக்கும் யாரும் யோசிக்காத,சொல்ல படாத ஒரு கதைக்களம். படத்தோட 2nd half-la சில பல குறைகள் இருக்கு.. இன்னும் கொஞ்சம் யோசித்திருந்தால் படம் தமிழ் சினிமாவின் நிகரில்லா படம்னு பேறு வாங்கிருக்கும். படத்தில் வருவது போல்,இது வரை எவரும் கண்டிராத அந்த டத்தை பிடிச்சிருப்பார். அது கண்டிப்பா missing. இருந்தாலும்இப்படி ஒரு முயற்சி எடுத்த செல்வாவை  பாராட்டாமா இருக்க முடியாது. இந்த படம் மூலம் தன்னையும் நம்ம சினிமாவையும் உலக தரத்துக்கு கொண்டு போயிட்டார்!! 
ராம்ஜி - படத்தோட உயிர் இவர் தான். ஒளிப்பதிவாளர். இவர் எவ்ளோ கஷ்டபட்டார்னு படம் பாக்குறப்ப நமக்கு புரியும். பிரமிக்க வைக்குது. பின்னி எடுத்திருக்கிறார். கண்களுக்கு விருந்து தான்.
GV பிரகாஷ் தேவையான அளவு சை அமைத்திருகார்னு தான் சொல்ல முடியும் . இருந்தாலும் அவர் திறமைக்கு முடிந்த வரை நல்லாவே பன்னிருகார். யுவன் touching கண்டிப்பா missing. ஆண்ட்ரியா first  half வரைக்கும் தான். இருந்தாலும் பிஞ்சு முகம் கண்லயே நிக்குது! 
படத்தின் முதல் பாதி தான் பலமே. அது நம்மை அடுத்து என்ன நடக்க போகிறதோ என்ற ஆவலை தூண்டுது.  "அதோ அந்த பறவை" பாடல் remix ஆகட்டும்,கார்த்தி ரீமாவிடம் வாங்கி   கட்டுவதும் சரிஇந்த ரெண்டு பொண்ணுங்ககிட்டையும் பண்ற சேட்டையும் சரி,  ஒரே அமர்க்களம் தான். குறிப்பா இடைவேளை அப்போ நம்மல மெய்சிலிர்க்க வைக்குது. அப்போ ரீமா காட்டுற அந்த சந்தோஷம் ஏன்னு படத்தோட பிற்பாதில தெரியும்.
Second half-la வசனங்களே ரொம்ப குறைவு. நிறைய நேரம் அமைதி தான். Gladiator போன்ற சண்டையின் ஆரம்ப காட்சிகள் அருமையா எடுத்திருக்காங்க. பார்த்திபன் நாட்டு மக்கள் இந்த ராணுவ வீரகளிடம் அனுபவிக்கிற சித்ரவர்த்தை கொடுமைடா சாமி. உண்மைலயே இப்படி தான் இருக்குமோ?? முதல் 10 நிமிடங்கள் பார்க்காமல் கிளைமாக்ஸ் பார்த்த படம் என்னடா டக்குனு முடிஞ்சிருஞ்சுனு தோணும். கிட்டத்தட்ட 2000 துணை நடிகர் நடிகைகள்.. எவ்வளோ பேரோட உழைப்பு!!!  
படத்தில் ஆங்காங்கே சில நெருடல்கள் ,  முகம் சுளிக்கிற காட்சிகள் ,  குறைகள் இருக்கு.  சிலர் கதறியும்  ஓடினார்கள். 
அதுனால என்ன??  
தமிழ் சினிமால இப்படி ஒரு படமோ,முயற்சியே கூட எடுக்கலையே..  
இனி வரதுக்கும் வாய்ப்புகள்  குறைவு தான்! அந்த முயற்சிக்கு என்  வாழ்த்துக்கள்!! 
ஆயிரத்தில் ஒரு படம் !!