Saturday 23 January, 2010

கிராமப்புற மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு!

தலைப்பை படித்ததும் பலரின் எண்ணத்தில் உதிப்பது, இரண்டு விதமான எண்ணங்களாக இருக்கும்..  "அட இதால தான் பா எனக்கு MBBS சீட் போச்சு.." , "இது மட்டும் இல்லாம இருந்திருந்தா நான் Anna university ல படிச்சிருப்பேன்"  "நல்ல வேலை இது இருந்துச்சி, இல்லேன்னா நான் எங்க இன்ஜினியரிங் படிச்சிருக்க போறேன்?" 
இந்த திட்டம் கொண்டு வந்ததால பல கிராமப்புற மாணவர்களால் B E , MBBS போன்ற படிப்புகளை பாக்க உதவுச்சு. அதே நேரத்துல, போன வருஷம்  cut - off வைத்து கடுமையா படிச்ச பலரின் கனவும் தகர்ந்து போச்சு. சரி இதை பற்றி சற்று விவரமாக பார்ப்போம்.. 
எவ்வளவு இட ஒதுக்கீடு? 
B E , MBBS போன்ற தொழிற்படிப்புகாக தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பயில பொது நுழைவு தேர்வு நடத்தப்பட்டு வந்தது (இப்போது இது இல்லை). +2 பொது தேர்வின் மதிப்பை தவிர  இந்த நுழைவு தேர்வின் மதிப்பை பொறுத்து தான் எந்த கல்லூரியில் என்ன பிரிவு கிடைக்கும் என தெரியும். கிராமப்புற மாணவர்களுக்கு இதை பற்றி போதிய விழிப்புணர்வு / வசதிகள் இல்லையென்ற ஒரு வாதத்தை முன்வைத்து 15 % ஒதுக்கீட்டை நிர்ணயித்தார்கள். ஒரு கட்டத்தில் அது 25 % கூட இருந்தது. நீதிமன்றம் இதில் தலையிட, இட ஒதுக்கீடே வேண்டாம்னு தூக்கிட்டாங்க. 
சரி.  இந்த திட்டம் கொண்டு வந்ததால யாரு நன்மை அடைஞ்சா? இப்படி செஞ்சதால மட்டும் கிராமப்புற கல்வி உயர்ந்திருகிறதா? எப்படி கொண்டு வந்திருந்தா இது நல்லா இருந்திருக்கும்? என்பதை பற்றி எனது கருத்துக்கள் இங்க முன்வைக்கிறேன். 
இந்த திட்டம் கொண்டு வந்ததால யாரு நன்மை அடைஞ்சா?
  • நான்.
  • என்னை போன்று அந்த காலகட்டத்தில் இந்த ஒதுக்கீடு மூலம் படித்த மாணவர்கள்.
  • இதன் மூலம் பெரிய கல்வி நிறுவங்களில் பாமர மாணவனாலும் படிக்க முடிந்தது.
பல பேரோட வயித்தெரிச்சலை கொட்டி தான் என்னால இத படிக்க முடிஞ்சுது. பலர் இதற்காகவே இட ஒதுக்கீடு உள்ள பள்ளிகளுக்கு தங்கள் பிள்ளைகளை சேர்த்து படிக்க வைத்தார்கள். இந்த திட்டம் அந்த பள்ளிகளுக்கு இருந்ததால செல்வாக்கும் கூடியது. 
இப்படி செஞ்சதால மட்டும் கிராமப்புற கல்வி உயர்ந்திருக்கா?
  • கண்டிப்பா இல்லை. 
அன்றைக்கு இருந்த அதே தரம் தான் இன்றும் இருக்கிறது. ஒரு சின்ன வித்தியாசம். இப்போ அந்த ஒதுக்கீடும் இல்ல, பொது நுழைவு தேர்வும் இல்லை. எந்த காரணத்தால இந்த நுழைவு தேர்வை கொண்டு வந்தாங்களோ அதோட நோக்கமே இல்லாம போனது தான் மிச்சம். 
நான் படிச்ச காலத்துல இந்த நுழைவு தேர்வு பற்றில்லாம் பெரிய விழிப்புணர்வே இல்லை. என்ன சுத்தி இருந்துவங்களும் அதே நிலைமை தான். ஒரு வேலை இதை (நுழைவு தேர்வை) நீக்காமல் இருந்திருந்தால் கூட இன்னைக்கும் பல பேருக்கு இது பற்றி தெரியாமல் போயிருக்கும். இதுல எனக்கு கொஞ்சம் கூட மாற்று கருத்தே இல்லை.
ஒதுக்கீடு தந்தா மட்டும் கல்வி தரம் உயர்ந்துருமா?  வேற என்ன வேணும்?? 
எப்படி கொண்டு வந்திருந்தா இது நல்லா இருந்திருக்கும்?
  • முதலில் எங்கெல்லாம் கல்வித்தரம் பின்தங்கி இருக்கிறதோ, அவற்றை தேர்வு செய்திருக்கணும். (இது அப்பொழுதே இருந்தது.)
  • அப்படி தேர்ந்தெடுத்த பின்னர், இன்னும் எத்தனை ஆண்டுகளில் என்ன திட்டங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் இருந்தால் இந்த கல்வி தரத்தை மேம்படுத்த முடியும் என்பதை ஆராய வேண்டும்.
  • இந்த  கால அளவுகோலை நிர்ணயத்து தான் ஒதுக்கீடை கொண்டு வந்திருக்க வேண்டும். 
  • படிப்படியாக ஒதுக்கீட்டின் விழுகாடை குறைத்து வரவேண்டும். அதே சமயம், தமிழகத்தின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள பள்ளிகளின் கல்வி தரம் உயர வேண்டும்!
  • இப்படி செய்வதன் மூலம், கிராமங்களில் உள்ள மாணவர்களுக்கும் ஒரு நம்பிக்கை இருக்கும். தன்னை போன்று உள்ள மாணவர்களும் நல்ல கல்வி நிறுவனங்களில் படிக்க செல்வதை பார்த்து தங்களுக்குள் ஒரு உற்சாகம் ஏற்படும். இது நல்ல ஒரு மாற்றத்தை கொண்டு வந்திருக்க வாய்ப்புகள் அதிகம்.  கல்வி வளர்ச்சியில் ஒரு பெரும் மாற்றத்தையே கொண்டு வந்திருக்கும்.
  • ஒரு கட்டத்தில் கிராமப்புற மாணவர்களும் அவர்களின் கல்வி திறனும் உயர்ந்திருக்கும், ஒரு நாள் இந்த  இட ஒதுக்கீடும் நீங்கி இருக்கும்! 
கல்வி தரம் ஒரே மாதிரி இருந்தால் எதற்காக தேவைற்ற உள்-ஒதுக்கீடு, வெளி-ஒதுக்கீடுகள்??


3 comments:

  1. இங்கு பள்ளியின் தரம் மட்டும் இல்லை . நிறைய காரணிகளை கவனத்தில் கொள்ள வேண்டி உள்ளது . இது பற்றி அப்புறம் சொல்லுகிறேன்

    ReplyDelete
  2. பந்தயமுன்னு வந்துட்டா மோதித்தான் ஜெயிக்கணும். பத்து பேரு கால்ல கல்ல கட்டி போட்டுட்டு மத்தவங்களோட மோத விடறது தப்பு. இட ஒதுக்கீடு அந்த மாதிரிதான். நம்ம ஊரோட பெரிய பிரச்சினையே அரசாங்கம் எல்லாத்துலயும் மூக்க நுழைக்குறது. கல்வி துறையுல இருந்து அரசாங்கம் மொத்தமா வெளிய வரணும். அத சமயம் பள்ளிக்கூடம், கல்லூரி ஆரம்பிக்கரதுக்கான விதிமுறைகள முழுக்க நீக்கிடணும். கல்வி துறையும் நாடும் கொஞ்சமாவது உருப்படும்.

    ReplyDelete
  3. பயனுள்ள பதிவு...வாழ்த்துக்கள்..தொடருங்கள்....

    ReplyDelete