களவாணி - இந்த வெள்ளி தான் வெளியாகும் என்று நினைத்திருந்தேன்.. திடீர் என்று பார்த்தல் கடந்த வாரமே வெளி ஆகிற்று.. என் நண்பனின் ஊர்காரன் தான் "விமல்" என்பதால், அவன் படம் பார்க்க வேண்டும் என்று மிக துடிப்பாக இருந்தான்.. சரி, படம் விமர்சனம் தேடி பார்த்தால் ஒன்றும் தென்படவில்லை... ஜெட்லி அவர்களின் விமர்சனம் பார்த்ததும் ஒரு சின்ன மகிழ்ச்சி! நம்பிக்கையு டன் நண்பர்களுடன் woodlands symphony சென்றோம்.
அந்த நம்பிக்கை வீண் போகவில்லை :) நன்றி ஜெட்லி :)
முழுக்க முழுக்க கிராமத்து மணத்துடன் இப்படி ஒரு படம் பார்த்து நிறைய நாள் ஆச்சு.. கதை என்று பார்த்தால், பெரிதாக ஒன்றும் இல்லை. ஊரில் வெட்டியாக சுற்றும் பையன் ஒரு பெண்ணை காதலித்து கல்யாணம் செய்யும் வழக்கமான காதல் கதை தான்! ஆனால் படைக்கப்பட்ட வி தம், நடிகர்களை தேர்வு செய்த விதம் நம்மை படத்தோடு ஒன்ற மிகவும் உதவுகிறது!
குறிப்பாக விமல், இளவரசு, சரண்யா.. இவர்கள் மூவரின் நடிப்பில் காட்சிகள் மிளிர்கின்றன.. விமலின் எதார்த்தமான நடிப்பு கிராமத்து இளவட்டமாக பொருந்திருக்கு. இவர் செய்யும் சேட்டைகள், களவானி தனம் அனைத்தும் ரசிக்க வைக்கிறது! கஞ்சா கருப்புடன் இவர்கள் சேரும் காட்சிகளில், திரையரங்கமே குலுங்குகிறது! நண்பனின் காதலி என்று சொல்லி கொண்டு அந்த பெண்ணை தூக்கி செல்லும் போதும், வசமாக அப்பாவிடம் மாட்டும் போதும், விமல் மிளிர்கிறார்.
ஹெலன் - திரைப்படத்தின் கதாநாயகி. அட, உண்மையாகவே பள்ளிக்கூடம் போற பொண்ணு மாதிரி தான் இருக்காங்க! படத்திற்கு தேவையான அளவு நடித்திருக்கிறார்!
இளவரசு, நிறைய படங்களில் இவரை சரியாக பயன்படுத்தவில்லையே என்று நான் எண்ணியதுண்டு! ஆனால், இது விதிவிலக்கு! இளவரசு வந்ததும் படம் கலை கட்டுகிறது! இளவரசுவின் எதார்த்தமான பேச்சு அருமையாக பொருந்திருக்கு! மகனிடம் (விமல்) கோபப்படும் போதும் சரி, மனைவியை (சரண்யா) பார்த்து ஒன்னும் செய்ய முடியாமல் இருக்கும்போதும் சரி, ரொம்ப இயல்பா நடிச்சிருக்கார்! "ஆணி போய் ஆவணி வந்தா பையான் top-la இருப்பான்னு கிராமத்து ஜோஷியார் சொல்லிருகாருல!" இப்படி பேசி பேசியே படம் முழுவதும், என்ன செய்தாலும் மகனுக்கு துணையாக இருக்கும் அம்மாவாக சரண்யா அசத்தியிருக்கிறார்!
திரைப்படம் முழுவதும் வட்டார மொழி அருமையாக பேசபட்டிருப்பதால், நம்மை சுற்றியே நிகழ்வது போல இருந்தது.
படத்தில் நான் ரசித்த இன்னொரு விஷயம், கண்டிப்பா ஐந்து பாடல் இருக்க வேண்டும் என்று இல்லாமல், படத்திற்கு தேவையான சில பாடல்களை தேர்வு செய்து, அதிலும் 1 - 2 நிமிட பாடல்களை வைத்தது!! SS குமரனின் இசை, ராஜ முகமதுவின் எடிட்டிங், ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு படத்திற்கு மேலும் பலத்தை கூட்டுகிறது! நல்ல கதை-இயக்குனர்களை தட்டி கொடுத்து, இப்படி ஒரு படம் தயாரித்த நசிர் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!!
படத்தின் மிக பெரிய பலமே திரைக்கதை தான். எங்காவது சோகமோ, இல்லை செண்டிமெண்ட் காட்சிகள் வரப்போகிறது என்று நினைத்தால், அங்கேயும் ஒரு நகைச்சுவை திருப்பத்தை தூவி நம்மை "அட" போட வைக்கிறார்! அதையே கிளைமாக்ஸ்-ல கையாண்ட விதம் அருமை! முதல் திரைப்படத்திலயே உங்கள் முத்திரையை அழகாக அழுத்தமாக பதித்திருக்கிறீர்!
படம் முழுவதும் நல்லதொரு திரைப்படம் பார்க்கிறோம் என்ற எண்ணம் இருந்துகொண்டே இருந்தது!! இது இயக்குனரின் மிகப்பெரிய வெற்றி! ரொம்ப அருமையா இருந்தது படம்!! இயக்குனர் சற்குணம் அவர்களே - தொடர்ந்து இது போன்ற நல்ல திரைப்படங்களை எடுக்க நான் என் நண்பர்கள் சார்பாக வாழ்த்துகிறேன்!!
அட உங்கள் விமர்சனம் களவாணி -மனதைத் திருடுகிறான். நன்று வாழ்த்துக்கள்
ReplyDeleteபடத்தின் மிக பெரிய பலமே திரைக்கதை தான். எங்காவது சோகமோ, இல்லை செண்டிமெண்ட் காட்சிகள் வரப்போகிறது என்று நினைத்தால், அங்கேயும் ஒரு நகைச்சுவை திருப்பத்தை தூவி நம்மை "அட" போட வைக்கிறார்!
ReplyDelete..... இது நல்ல விஷயம். அருமையாக, ரசிகனின் பார்வையில் விமர்சித்து இருக்கீங்க. :-)
//மதுரை சரவணன் said...
ReplyDeleteஅட உங்கள் விமர்சனம் களவாணி -மனதைத் திருடுகிறான். நன்று வாழ்த்துக்கள்//
மதுரை சரவணன், வருகைக்கும் தங்கள் வாழ்த்துக்கும் நன்றி :)
//Chitra said...
படத்தின் மிக பெரிய பலமே திரைக்கதை தான். எங்காவது சோகமோ, இல்லை செண்டிமெண்ட் காட்சிகள் வரப்போகிறது என்று நினைத்தால், அங்கேயும் ஒரு நகைச்சுவை திருப்பத்தை தூவி நம்மை "அட" போட வைக்கிறார்!
..... இது நல்ல விஷயம். அருமையாக, ரசிகனின் பார்வையில் விமர்சித்து இருக்கீங்க. :-)//
சரியா சொன்னீங்க சித்ரா! எனக்கு படம் பார்த்ததும் மனநிறைவாக இருந்தது!
kandippa padam paarthudalaam
ReplyDeletevimarsanam nandru. vazhthugal-meerapriyan
ReplyDeleteநல்ல படமா இருக்கும்மாட்டுக்குது... பார்த்திடுவோம். எந்திரன் டீம்ம உட்கார வைச்சு இந்தப் படத்தை போட்டுக்காட்டுங்கப்பா :)
ReplyDeleteகார்த்திக், விமர்சனம் நல்லா எழுதுறீரு... நன்றி!