எப்படி இருந்த நான்:
- கல்லூரியில் படித்த நாட்கள் அவை. விடுதியில் தங்காமல் திருப்பரங்குன்றத்தில் நண்பர்களுடன் தங்கியிருந்தேன்.ரூ 2000 இருந்தால் ஒரு மாதம் தாராளாமாக செலவு செய்யலாம். தினம் சாப்பாட்டிற்கு அருகே ஒரு வீட்டில் ஏற்பாடு செய்து தருவார்கள்.
- நண்பன் இன்று போட்ட சட்டை நாளை எனது, மறுநாள் இன்னொருவன். இப்படியே செல்லும். வருடம் ஒரு புது ஆடை எடுத்தால் பெரிய விஷயம்..
- treat என வந்தால் ஹோட்டல் ஆர்த்தி தான். ரூ 25 -க்கு சாப்பாடு... மிகப்பெரிய treat அது..
- ஞாயிற்றுக்கிழமை ரூ 50 கொடுத்தால் சிக்கன் கிடைக்கும் :-) நான்கு பேர் வயிறார சாப்பிடலாம். இருப்பினும் மாத கடைசியில் இந்த பணத்திற்கும் திண்டாட்டம் தான். எவ்வளவு தான் பெட்டி, சட்டை என எங்கு தேடினாலும் பத்து ரூபாயை தாண்டாது. அப்பொழுது தான் நண்பன் மாசானம் வருவான். உள்ளூர் பையன். எனவே வெளியே செல்லலாம் என்று எங்களைத்தேடி வருவான். வந்தவனை மடக்கி இருக்கும் காசை பிடுங்கி சிக்கன் சமைக்க தந்து விடுவோம். அவன் திரும்ப வீடு செல்ல காசு இருக்காது.. சின்ன சொக்கிகுளம் செல்ல இரண்டு பேருந்துகள் மாறி சென்றால் ரூ 7 தேவைப்படும். மிகவும் சிரமப்பட்டு ரூ 5 ஏற்பாடு செய்வோம். ஒரே பேருந்தை பிடித்தால் ரூ 4.50 தான்.. அதற்காக ஒரு மணிநேரம் காத்திருக்க வேண்டும்.
- தங்கியிருந்த வீட்டில் இருந்து கல்லூரி செல்ல சைக்கிள், லிப்ட் என எப்படியாவது செல்வேன்.. ஆனால் காசு கொடுத்து சென்றதில்லை.. ஒரு நண்பன் இருக்கிறான் அவன் புண்ணியத்தில் ஆட்டோவில் செல்வோம்.. என்றாவது ஒரு நாள்.
- திரைப்படம் பார்ப்பதென்றால் அலாதி பிரியம். தேவி கலைவாணி, மணி இம்பாலா ரூ 20 - 25 -ல் முடிந்து விடும்.. A/C, DTS அங்கும் உண்டு ..
இப்படி ஆகிட்டேன்:
- அனைத்து வசதிகளும் கொண்ட வீடு, சொகுசான வாழ்க்கை.... மாத செலவு பல மடங்கு எகிறிவிட்டது.
- மாதம் புது புது ஆடைகள்.. ஜிகு ஜிகு சட்டைகள்.
- treat - என வந்தால் மாத சம்பளமே காலி ஆனாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. நம்மளும் மற்றவர்கள் treat -ல வெளுத்து வாங்குரோம்ல..
- இன்று என்னடானா சிக்கன் 65 விலை நூறு-ஐ தொடுகிறது.. தொட்டு என்ன பண்ண, ஒருத்தருக்கு கூட காணுவதில்லை.
- பயணத்திற்கு தேவை என்றால் ஆட்டோ இல்லையேல் குலு குலு சொகுசு பேருந்து, கால் டாக்ஸி என்று மாறி போய்விட்டது.
- சினிமா பார்பதென்றால் சத்யம், ஐநாக்ஸ், மாயாஜால். விலையை சொல்லி தெரிய வேண்டியதில்லை..
"எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன்.."
முதல் முறையா எழுதுறீங்கன்னு சொல்ல முடியாதபடிக்கு அழகான எழுத்து நடை. தொடர்ந்து சிந்திங்க, எங்களுக்கும் கொடுங்க :) .
ReplyDeleteவாழ்த்துக்கள், நண்பரே!
மிக்க நன்றி, வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும்!!
ReplyDeleteநண்பா பதிவுலகில் பட்டய கிளப்ப வாழ்த்துக்கள் .
ReplyDeleteமாசனத்தை (சின்ன கேப்டனை) ஒரு குழந்தை பயலை அப்பவே நொண்டி நொங்கு எடுத்திருகிங்கலேடா .
டேய் அந்த ஜிகு ஜிகு சட்டை மட்டும் எப்படியாவது போடுறதை விடடுருடா .. மாடு எல்லாம் நீ பைக்ல வர்றப்ப மிரண்டு ஓடுது ..
அன்புடன்
மீன்துள்ளி செந்தில்
இந்த வலைபதிவு எழுத முதற்காரணம் நீ தான்... நன்றி.. வாழ்த்துக்கள்.. மீன்துள்ளி செந்தில்.
ReplyDeleteஅழகிய எழுத்து நடை
ReplyDeleteதொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்
தங்கள் கருத்துரைக்கு என் நன்றி.. நி கே!
ReplyDeleteஜான்... நல்ல தான் எழுதுற... :)
ReplyDeleteஇதுல ஒரு விஷயம் என்னனா... ஜான் ஒரு ஆங்கில புலவரும் கூட..
//
ReplyDeletesbalamurugan said...
ஜான்... நல்ல தான் எழுதுற... :)
இதுல ஒரு விஷயம் என்னனா... ஜான் ஒரு ஆங்கில புலவரும் கூட.
//
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பா!
கார்த்தி... நம்ம வாழ்க்கையைப் பற்றி நல்லாத்தான் சொல்லி இருக்கின்றாய்... உன்னுடைய இந்த முதல் பதிவிற்கு எனது வாழ்த்துக்கள்...
ReplyDeleteஇன்னும் நிறைய காத்திருக்கு நண்பா!
ReplyDeleteஇது ஒரு பொழைப்பு ..
ReplyDeleteஅப்படின்னு யாரவது உன்னை கேட்டா ..கூடவே நானும் வருவேன் ..
நாங்களும் அப்படித்தானே ..