Saturday 6 March, 2010

அவள் பெயர் தமிழரசி - என் பார்வையில்!!!

மோசர்பேர் நிறுவனத்தின் படைப்புகள் மீது எப்பவுமே எனக்கு மிகுந்த நம்பிக்கை உண்டு. மொழி, ராமன் தேடிய சீதை, பூ போன்ற படங்கள் தான் அதற்க்கு காரணம். அந்த நம்பிக்கையலே நண்பன் டிக்கெட் முன்பதிவு செய்கிறேன் என்றதும் உடனே செய்து விடு என்று சொல்லி விட்டேன். தேவிபாலா திரைஅரங்கில் நேற்று இரவு, நண்பர்கள் புடைசூழ கிளம்பினேன்!

"அவள் பெயர் தமிழரசி" என்ற அழகிய தமிழ் தலைப்பை வைத்து "தமிழிலே" வெளி வந்துள்ள திரைப்படம் ! நம்மால் கைவிடப்பட்ட பல நல்ல கலைகளில் ஒன்று "தோல் பாவை கூத்து" - ஊர் நல்ல செழிப்புடன் இருக்க, இவ்வகை கூத்து கலைஞர்கள் பத்து நாட்கள் தங்கியிருந்து கூத்து கட்டுவார்கள். இப்படி நடைபெறும் பத்தாவது நாளில் மழை வரும் என்பது நம்பிக்கை, ஐதீகம். மழையும் வரும், ஊரும் செழிப்பாகும், ஜெய் நந்தகியின் நட்புடம் அழகிய பயணம் தொடரும். தோல் பாவை கூத்து, இவர்களின் நட்பு, ஊர் குசும்பு என்று சுற்றியே கதை. 


விஜய் ஆண்டனியின் இசையில் பாடல்கள் (கூட்ஸ் வண்டி)  அருமை. பின்னணி இசையிலும் அசத்தி  இருக்கிறார். PG முத்தையாவின் கேமரா அத்துணை அழகு. படத்தின் மிக பெரிய பலம். ஒவ்வொரு காட்சிகளிலும் கைதட்டல் பெறுகிறார்.


மீரா கதிரவன் முதல் திரைப்படத்திலே நல்ல இயக்குனருக்கான அத்தனை அம்சங்களையும் உண்டு  என்பதை நிரூபித்திருக்கிறார் (அடுத்த படம் எப்போ சார்??). உணர்வு பூர்வமான காட்சிகள் நிறைய இருக்கு. நம்மை அறியாமலே நம் கைகள் தட்டுவதை நம்மால் மறுக்க முடியாது (குறிப்பாக இடைவேளைக்கு பிறகு வரும் ஜெய் - நந்தகி அம்மா சந்திப்பு). வட்டார வழக்குகளை எத்தனை திரைப்படங்கள் சரியாக காட்டி இருக்கின்றன என்று பார்த்தல் மிக குறைவு தான். இந்த விடயத்தில் சாதித்து விட்டார் என்று தான் சொல்ல வேண்டும்.

தோல் பாவை கூத்தின் சிறப்புகள், அது அழிந்து போனதை எண்ணி நந்தகி தாத்தா பேசும் வசனம், கூத்தின் பத்தாவது நாள் மழை வரும் என்றெண்ணி வானம் பார்க்கும் போன்ற காட்சிகள் நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது!


ஜெய் படத்திற்கு படம் மெருகேறிக்கொண்டே போகிறார். பள்ளி மாணவனாக வரும் காட்சிகளில் அப்படியே சின்ன பையனாகவே இருக்கிறார். நந்தகி, இந்த கதைக்கு ஏற்ற நாயகி. தமிழரசி என்றே வாழ்ந்து விட்டார். கிளைமாக்ஸ் காட்சியில் வருபவரா முதலில் வந்தவர் என்ற ஆச்சர்யம். நடிப்பில் நல்ல வித்தியாசம். கஞ்சா கருப்பு வரும் காட்சிகளில் திரையரங்கே கலை கட்டுகிறது. ஜெய்யின் தாத்தாவாக வருபவர் வெளுத்து வாங்கிருக்கிறார். நந்தகியின் அம்மா, தாத்தா, தம்பி என அத்தனை பேரும் அம்சமாக பொருந்தியிருக்கிராரகள். நட்சத்திர பட்டாளம் என்று பெரிதாக தேவை இல்லை, கதைக்கு தேவையான சரியான நடிகர்களை தேர்வு செய்த விதத்தில் இயக்குனரை பாராட்டாமல் இருக்க முடியாது. இந்த ஒரு  விடயத்திலயே  கதையை நம்பி திரைப்படம் எடுக்கும் நல்ல இயக்குனர் வரிசையில் நின்றுவிட்டார். படத்தில் வரும் வசனங்கள் இன்னொரு பெரிய பலம். "மொட்டைகுண்டி", "குண்டியாட்டி குருவி" உள்ளிட்ட காட்சிகள் நம்மை நகைச்சுவையில் ஆழ்த்துவதில் ஆச்சர்யமில்லை!!   


முதல் பாதியில் தன் முத்திரையை ஆழமாக காட்சிகளால் அழகாக தந்து முத்திரையை பதிந்திருக்கிறார், இயக்குனர். இரண்டாம் பாதியில் ஒரு சில படங்களை நினைவுபடுத்தினால் கூட, கிளைமாக்ஸ் காட்சியில் அசத்தியிருக்கிறார். படம் மெல்ல நகர்ந்தாலும் நல்ல திரைப்படம் பார்க்கிறோம் என்ற நம்பிக்கை இருந்தது. கதை சொல்லப்பட்ட விதம், காட்சிகள் நம்மை இன்னும் கவனமாக படம் பார்க்க உதவுகிறது! இன்னும் கொஞ்சம் உணர்வுபூர்வமான காட்சிகள் இருந்திருந்தால் படம் மிக பெரிய அளவில் பேசப்பட்டிருக்கும், இப்பொழுதும் பேசப்படும், நல்லதொரு திரைப்படம் தந்ததற்காக! 


குத்து பாட்டு, இரட்டை வர்த்த வசனங்கள், வேண்டுமென்றே திணிக்கப்பட்ட பஞ்ச் வசனங்கள், மசாலா காட்சிகள் நிறைந்த திரைப்படம் இது அல்ல. 


என் மனமார்ந்த வாழ்த்துக்கள் இயக்குனர்  மற்றும் குழுவினருக்கு !!

7 comments:

  1. ரசித்து பார்த்த அதே உணர்வுடன் எழுதப்பட்ட விமர்சனம்

    ReplyDelete
  2. படம் இன்னும் பார்க்கவில்லை, நாளை செல்கிறேன்.
    என் கருத்தை நாளை பதிவு செய்கிறேன்.

    ReplyDelete
  3. after intervel film is bad =====balu

    ReplyDelete
  4. நல்ல விமர்சனம். நான் படம் பார்க்க போறேன்....

    ReplyDelete
  5. //மீன்துள்ளியான் said...
    ரசித்து பார்த்த அதே உணர்வுடன் எழுதப்பட்ட விமர்சனம் // நன்றி மீன்ஸ்!

    //Michael Vasanth said...
    படம் இன்னும் பார்க்கவில்லை, நாளை செல்கிறேன்.
    என் கருத்தை நாளை பதிவு செய்கிறேன்// நண்பா படம் பாத்துட்டியா ???

    //coimbatorebalu said...
    after intervel film is bad =====balu//
    தங்கள் வருகைக்கு நன்றி பாலு .. இன்னும் கொஞ்ச சிறப்பா பன்னிருக்கலாம்னு தோணுது :)

    //vai said...
    நல்ல விமர்சனம். நான் படம் பார்க்க போறேன்...//
    நன்றி "வை" பாத்துட்டு சொல்லுங்க !

    ReplyDelete
  6. நல்ல விமர்சனம். பார்க்க வேண்டியது அவசியம் எனத் தோன்றுகிறது.

    ReplyDelete
  7. nice review.. we need more acting from both hero and heroie... suthakar

    ReplyDelete